கவர்ச்சியின் உச்சத்தை தொடும் "டிக் டாக்" ..! 

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் டிக் டாக் மியூசிக்கலி ஆப் மூலம் பலரும் அத்துமீறி நடந்து வருகின்றனர். முன்பு ஒரு காலத்தில் ஆபாச வீடியோக்களை பார்ப்பது என்பது குதிரைக் கொம்பாக பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது சாதாரண டிக் டாக்  போன்ற apps மூலமாகவே பார்க்கப்படுகிறது. அதாவது இதை பயன்படுத்தும் நபர்களே ஆபாசமாக தங்களை காண்பித்துக் கொள்கின்றனர்.

பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் வாலிபர்கள் , வீட்டில் இருக்கும் பெரியவர்கள் என அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் டிக் டாக் மியூசிக்கலி ஆப்பிற்கு அடிமையாகி உள்ளார்கள். காரணம் நல்ல ஒரு பொழுது போக்காக உள்ளது.

இந்த ஆப்ஸில் இடம் பெற்றுள்ள பாடல்கள், வசனங்கள், திரைப்பட காட்சிகள், கதாநாயகன்-கதாநாயகி கட்டிப்பிடித்து ஆடக்கூடிய பாடல் வரிகள் என அனைத்துமே கிடைக்கின்றது. இதனையெல்லாம் பார்க்கும் போது, இதில் ஏற்பட்டுள்ள அதிக ஆர்வத்தின் காரணமாக தன்னை தானே ஒரு ஹீரோவாக கற்பனை செய்து கொண்டு அதே போன்று தன்னுடைய காதலியை ஒரு கதாநாயகி போல செயல்பட வைப்பதுமாக வீடியோ காட்சிகளை எடுக்கின்றார்கள்.

இந்த ஆப் மூலம் தன்னுடைய கலைத்திறனை வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு விதமான வசனங்கள் பாடல் காட்சிகளை தேர்வு செய்து வெளிப்படுத்துகின்றார்கள். ஆனால் ஒரு சிலர் இதில் இருக்கக்கூடிய விபரீதம் எதுவும் அறியாமல், கோடிக்கணக்கில் பொது மக்கள் பார்ப்பார்களே என்ற எந்த ஒரு அச்சமும் இல்லாமல் முத்தக்காட்சிகள் செய்வதும், அரைகுறை ஆடை அணிவதும் நீச்சலுடையில் திரிவதுமாக, வீட்டில் சமையல் மட்டுமே செய்து பழகி இருக்கக்கூடிய இல்லத்தரசிகள் கூட இந்த ஆப்ஸிற்கு  அடிமையாகி இருக்கின்றார்கள்.

அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் திரைப்படங்களில் இடம் பெறக்கூடிய இடுப்பு தெரியும் படியான சில காட்சிகளை அப்படியே இவர்களும் செய்கிறார்கள். இதை அந்த ஆப்பில் பதிவிடுகிறார்கள் அவர்களுக்கு ஏராளமானவர்கள் பின்தொடர்கிறார்கள்.  

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. அதை பார்க்கும்போது சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு ஒரு சில காட்சிகள் இடம்பெறுகின்றன. இதற்கெல்லாம் காரணம் இதுபோன்ற ஆப்ஸை சொல்வதா அல்லது மக்களின் மனநிலையை கூறுவதா? 

இந்த ஆப்ஸில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருப்பதால் அனைவருமே அனைத்து வீடியோக்களையும் பார்க்க முடியும். இவ்வாறு பார்க்கும்போது மாணவர்கள் வேலைக்கு செல்லும் வாலிபர்கள் என அனைவருமே ஒருவிதமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்

இவர்களால் சரிவர வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனையெல்லாம் தவிர்க்க நம் பிள்ளைகள் மீது நாம் தான் அதிக கவனத்தை செலுத்தி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.