மாஸ்க் கிடைக்காததால் பிளாஸ்டிக் கவரை முகத்தில் போர்த்தி செல்லும் மக்கள்..! 

சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்து வருகின்றனர். இதுவரை இதற்கு எந்த ஒரு சரியான மருந்து கிடையாது. ஆனால் அதற்கான தடுப்பு ஊசி என்னவென்று ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர் மருத்துவர்கள்.

இந்த நிலையில் சீனாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் பலரும் பாதிப்பு அடைந்து உள்ளனர். பலி எண்ணிக்கை 200 தாண்டி உள்ளது. 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாணவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை போன்று பெங்களூரில் 19 பேர் சந்தேகத்தின் பெயரில் கரோனா வைரஸ் உள்ளதா என உறுதி செய்வதற்காக தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர்.

இந்த ஒரு தருணத்தில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து யோசனை செய்து வருகிறது. அதன்படி இதற்கு சரியான மருந்து இல்லை என்றாலும் வராமல் தடுப்பது எப்படி என பார்த்தால், மாஸ் அணிந்து கொள்வது ஓர் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தற்போது மாஸ்க் அணிய தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக தேவை அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாஸ் தயாரிக்கும் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் தொடர்ந்து தயாரித்து பல நாடுகளுக்கு அனுப்புகின்றனர். 

இப்படி ஒரு தருணத்தில் பயணம் மேற்கொள்ளும் போதும், பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் போதும், வெளியில் செல்லும் போதும்  மாஸ்க் இல்லாத காரணத்தினால் நெகிழி உரையை முகம் முழுக்க கவரும் வகையில் போர்த்திக் கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அதேபோன்று நெகிழி உரையை முகம் முழுக்க கவர் செய்து வெளியில் செல்கின்றனர்.

குழந்தைகளுக்கும் இதே பாணியில் தலையில் நெகிழி உரையை சுற்றி கொண்டு செல்லும் இந்த ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை வைத்து பார்த்தோமேயானால் மாஸ்க் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.