Asianet News TamilAsianet News Tamil

கொட்டித்தீர்க்கும் மழை... வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி..!

சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். 
 

People are suffering due to Rain water intrusion into houses
Author
Tamil Nadu, First Published Nov 12, 2020, 10:44 AM IST

சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

 People are suffering due to Rain water intrusion into houses

தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. சென்னையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.People are suffering due to Rain water intrusion into houses

சாலிகிராமம், விருகம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios