செல்போன் இல்லாமல் பெற்ற குழந்தைக்காக 1 மணி நேரம் ஒதுக்க முடியுமா..? கலங்கி நிற்கும்  கல்வித்துறை..! 

செல்போன் இல்லாமல் குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் செலவிட வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தல் பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

செல்போன் லேப்டாப் டாப் என எந்த ஒரு மின் சாதனங்களையும் பயன்படுத்தாமல், குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது பெற்றோர்கள் தங்களது நேரத்தை குழந்தைகளுடன் செலவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆரோக்கிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும், பெரியவர்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும், சுய ஒழுக்கம் பேணி காக்க வேண்டும் இப்படி பல விஷயங்களை நமக்கு அட்வைஸ் செய்வதை பார்த்து இருப்போம். ஆனால் தாம் பெற்ற குழந்தைகளுடன் ஒரு மணி நேரமாவது பெற்றோர்கள் செலவிட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தும் அளவிற்கு உள்ளது நமது கலாச்சாரம்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவிக்கும் போது,நவம்பர் 14-ம் தேதி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பெற்றோர்கள் அனைவரும் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தங்களது குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்த ஒரு மின் சாதன பொருட்களையும் பயன்படுத்த கூடாது என்றும், இந்த செயலை அந்த ஒரு நாள் மட்டுமே செய்து விடாமல் தினமும் கடைபிடித்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது மிக சிறந்தது என தெரிவித்துள்ளார்.

இதுதவிர குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல் தொடர்பாக தேவைப்படும் வழிகாட்டுதல்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்களுக்கு இது குறித்த விவரம் தேவை என்றால் இந்த வழிகாட்டுதலை இணையதளம் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் அதில் ஒரு சில குறிப்பிட்ட கேள்விகளும் கேட்கப்படும். அந்த கேள்விகளுக்கு பெற்றோர்கள் பதில் அளித்தால் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.