1 வயது குழந்தையை கருணை கொலை செய்ய கோரிக்கை வைத்த பெற்றோர்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய நீதிமன்ற வழக்கு...! 

ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த மதனபள்ளி என்ற கிராமத்தில் வசித்து வருபவர்கள் பவாஜன் மற்றும் ஷப்னா தம்பதியினர் இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென பெரும் துயரம் ஏற்பட்டது.

காரணம் தன்னுடைய ஒரு வயது குழந்தைக்கு "ஹைபோகிளைசிமியா" என்னும் ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்பட்டு உள்ளது. இதற்காக குழந்தையை 24 மணி நேரமும் கவனமாக பராமரிக்க வேண்டும்... அதுமட்டுமல்லாமல் சிகிச்சை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சைக்கான செலவும் அதிகம். சிகிச்சை எடுத்துக் கொள்வதால் குழந்தைக்கு உடலளவில் வலி அழுகை என அனைத்தையும் பெற்றோர்களால் பார்க்க முடியாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கூலி வேலை செய்து வரும் இவர்கள் தாங்கள் வைத்திருந்த நகை பணம் அனைத்தையும் விற்று இதுவரை 12 லட்சம் ரூபாய் வரை செலவழித்து சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாமல் மிகவும் துன்பத்திற்கு ஆளாக பவாஜன் மற்றும் ஷப்னா நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்து உள்ளனர். அதில் நாங்கள் தவமிருந்து பெற்ற மகளை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுள்ளனர். இது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

மேலும் எந்த அளவிற்கு பெற்றோர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கருத்து நிலவுகிறது. வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படும் இதே போன்ற நிகழ்வு கடந்த 2016ம் ஆண்டு அதே ஆந்திராவில் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர் ஒரு குடும்பத்தினர். ஆனால் சிகிச்சை எடுத்த வந்த போதே, வழக்கு முடிவதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.