திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ முகாமில் கொரோனா நோயாளிகள் ஐந்து நாள் சிகிச்சையில் புத்துணர்ச்சி பெற்று கொரோனாவில் இருந்து மீண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் நாற்றாம்பள்ளியில் உள்ள கல்லூரி ஒன்றில் சித்த மருத்துவ சிறப்பு முகாம் செயல்ப்பட்டு வருகிறது. இங்கு மூலிகைகளால் ஆன முகக்கவசம் வழங்கப்படுவதோடு நோயாளிகளுக்கு நுரையீரல் தொற்றை தடுக்கும் வகையில் வெற்றிலை மருந்து, தேன் கலந்த மருத்துவம் போன்றவை அளிக்கப்படுகிறது.

2 மணி நேரத்திற்கு ஒரு முறை சூப், கசாயம், சிறுதானிய உணவுகள், மண் பானை சமையல் போன்றவை வழங்கப்படுகிறது. நடைப்பயிற்சி, நிலா சோறு, குழந்தைகளுக்காக வேப்பிலை ஊஞ்சல், மண்பானையில் ஆவி பிடித்தல் என அனைத்து பாரம்பரிய முறைகளையும் கடைப்பிடித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் 5 நாட்களிலேயே கொரோனா நோயாளிகள் புத்துணர்ச்சி பெற்று வீடு திரும்பி வருகின்றனர். மேலும் இங்கு தனி தனி அறை ஒதுக்கப்பட்டு விளக்குகள் ஏற்றி தியான சிகிச்சையும் அளிக்கப்படுவது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.