வீடு தேடி வந்த பி.வி சிந்து...! தல அஜித் செய்த அசத்தல் நிகழ்வு..! 

தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிவி சிந்துவிற்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமர் மோடி உள்ளிட்ட பெரும்புள்ளிகள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தென்னிந்திய பிரபல நடிகரான அஜித் வீட்டிற்கு வந்த பிவி சிந்து வந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனை எதிர்பாராத நடிகர் அஜீத் அவரது வீட்டில் பிவி சிந்துவை கௌரவித்து,வாழ்த்து தெரிவித்து பலமாக கவனித்து அனுப்பியுள்ளார்.

மேலும் விளையாட்டு துறையில் இன்றைய இளைய சமூகத்தினர் ஆர்வம் காண்பிக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது பெரும் ஊக்கத்தை அளிப்பவர் அஜித். அஜித் சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச்சிறந்த ரேசர் என்பதால் பிவி சிந்து விற்கு அஜித் மீது தனி மரியாதையும் மதிப்பும் உண்டு. இதன் காரணமாகத்தான் வெற்றி பெற்ற கையோடு நடிகர் அஜித் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார் பி வி சிந்து.

இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த அஜித் மற்றும் ஷாலினி குடும்பத்தினர் மற்றும் பிவி சிந்து ஒன்றாக ஒரு போட்டோ எடுத்து உள்ளனர். இந்த போட்டோவை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பிவி சிந்துவின் ஆதரவாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என அனைவரும் சமூக வலைத்தளத்தில் இந்த போட்டோவை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் இது குறித்து பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.