குளிர்காலத்தில் கமலா ஆரஞ்சு..! சருமத்தில் ஏற்படுத்தும் மாபெரும் மாற்றம் என்ன தெரியுமா ..?

குளிர்காலம் தொடங்கிவிட்டது... இந்த காலகட்டத்தில் நம் உடம்புக்கு எது முக்கியம் என்பதை நாம் கண்டிப்பாக அறிந்திருப்பது மிகவும் நல்லது.

அதிலும் குறிப்பாக எந்த பழவகை நமக்கு முக்கியமானது தெரியுமா? ஆமாம்.. ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டுமாம். அதாவது குளிர்காலத்தை பொறுத்தவரையில் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் காய்ச்சல் வரும், சளி பிடிக்கும் என சொல்வார்கள். ஆனால் குளிர்காலத்தில் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிடுவது அவ்வளவு நல்லதாம். சுவையும் அதிகமாக இருக்கும் அல்லவா?

பொதுவாகவே குளிர்காலத்தில் உடல் வெப்பநிலை குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாகத்தான் இருக்கும். சருமம் வறண்டு காணப்படும். செரிமான மண்டலம் சற்று பலவீனம் அடைந்து இருக்கும். இதனையெல்லாம் ஈடுசெய்யும் பொருட்டு ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிட்டால் மிகவும் நல்லதாம்.

ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கு அதிக நன்மை செய்யும், மேலும் இதில் இருக்கக்கூடிய விட்டமின் சி குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க செய்யும், சருமம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்யும், மேலும் காய்ச்சல் சளி பிரச்சனைக்கு ஒரு தீர்வாகவும் அமையும். அதனால் கமலா ஆரஞ்சு பழத்தை குளிர்காலத்தில் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள், இதய நோய் வராமல் பாதுகாக்கும். அதே போன்று சிறுநீரில் சிட்ரேட் குறைபாட்டினால் சிறுநீரக கற்கள் ஏற்படுகிறது அல்லவா ..? சிறிய அளவிலான சிறுநீரக கற்களை அகற்ற ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்கொள்ள பரிந்துரையும் செய்யப்படுகிறது.