அட்சய திருதியன்று ஆன்லைன் புக்கிங்..! நகை வாங்க விரும்பம் பெண்களுக்கு நல்ல செய்தி ..!
அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எந்த ஒரு காரணத்திற்காகவும் வெளியே வர முடியாத ஒரு சூழல் நிலவுகிறது. இந்த ஒரு நிலையில் நாளை அட்சய திருதியை வர இருப்பதால் பொதுவாகவே பெண்கள் அரை பவுன் நகையாவது எடுக்க வேண்டும் என நினைப்பார்கள்.
அட்சய திருதியன்று ஆன்லைன் புக்கிங்..! நகை வாங்க விரும்பம் பெண்களுக்கு நல்ல செய்தி ..!
கொரோனா எதிரொலியால் தொடர்ந்து 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் அனைத்து சேவைகளும் முடங்கி உள்ளது.மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருக்கின்றனர்.
அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எந்த ஒரு காரணத்திற்காகவும் வெளியே வர முடியாத ஒரு சூழல் நிலவுகிறது. இந்த ஒரு நிலையில் நாளை அட்சய திருதியை வர இருப்பதால் பொதுவாகவே பெண்கள் அரை பவுன் நகையாவது எடுக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் தற்போது எந்த கடையும் திறக்கப்படவில்லை.
இந்த ஒரு நிலையில், ஆன்லைன் மூலம் நகைகளை விற்கும் முயற்சியில் நகைக்கடைகள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் முன்பதிவு செய்துகொண்டு முடிந்த 144 தடை உத்தரவு முடிந்தபிறகு, நேரில் வந்து நகை வாங்கிக் கொள்ளலாம் என பல்வேறு நகை கடைகள் தெரிவித்து உள்ளன, இது குறித்த விளம்பரங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றது. பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளன்றுஒரு கிராம் நகையாவது எடுப்பது வழக்கம்.
ஆனால் இந்த வருடம் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்பதால் வீட்டு பெண்கள் வருத்தம் அடைய கூடாது என்பதற்காகவும் அதேவேளையில் நகைகளை விற்பனை செய்வதற்காகவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு ஆன்லைன் மூலமாகவே நகைகளைத் தேர்வு செய்து புக் செய்ய இந்த வசதியை ஏற்படுத்தி உள்ளது பல்வேறு நகைக்கடைகள்