சாம்பார் வெங்காயம் விலை ரூ.140..! மக்கள் பெரும் அதிர்ச்சி...! 

விளைச்சல் குறைந்துள்ளதால் சாம்பார் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெங்காயம் 160 ரூபாய் வரை விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்தும் வெங்காயம் வரத்து இருக்கும். இந்த நிலையில் பல மாநிலங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்து 50 சதவீத வெங்காய மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறது.

இந்த நிலையில் பல்லாரியில் இருந்து கொண்டுவரப்படும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து கிடுகிடு என உயர்ந்து வருகிறது. இதன் விலை உயர்வால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

விலை உயர்வை பொருத்தவரையில் பல்லாரியில் இருந்து கொண்டு வரப்படும் ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய் உயர்ந்து, 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதேபோன்று ஆந்திரா வெங்காயத்திற்கு 70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் அதனுடைய தரத்திற்கு ஏற்ப 130 முதல் 140 வரை விற்கப்படுகிறது. இதைப்போன்று முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருளான வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.