வெங்காயம் கிலோ 8 ரூபாய் தான்..! எங்களிடம் வாங்க மாட்டீங்களா.? கதறி அழும் விவசாயி..! கொடுமையின் உச்சம்..! 

மகாராஷ்டிராவில் தற்போது பரபரப்பாக நிலவி வரும் ஒரு அரசியல் சூழ்நிலைக்கு நடுவே ஓர் விவசாயின் கண்ணீர் துளி அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. 

இந்த ஒரு தருணத்தில் நாடு முழுவதுமே, வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து இருப்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால் நடுத்தர மக்கள் மட்டுமின்றி அனைவருமே மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனை சமாளிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது ஒரு பக்கம். 

 

அதே வேளையில் உழைத்து சாகுபடி செய்த வெங்காயத்தை விற்க முடியாமலும் அப்படி விற்றாலும்மிக குறைந்த விலைக்கு மட்டுமே வெங்காயம் விற்க முடிகிறது என்றும் விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க பேசி மன வேதனையை தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 80 முதல் 90 வரை விற்கப்பட்டு வரும் தருணத்தில், அதிக தட்டுப்பாடு நிலவி வரும் இந்த ஒரு நிலையில் ஒரு கிலோ வெங்காயம் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் போது ரூபாய் 8 மட்டுமே கொடுத்து வாங்கப்படுவது மிகப் பெரியவேதனைக்குண்டான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மகாராஷ்டிராவில் உள்ள அகமத் நகரை சேர்ந்த விவசாயி கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் மழை வெயில் குளிர் என எதையும் பார்க்காமல் வேலையாட்கள் மிகவும் கடினப்பட்டு உழைத்து விவசாயம் செய்து உள்ளோம். அவர்களுக்கு நான் எப்படி சம்பளம் கொடுப்பேன்... என் குடும்பத்தை எப்படி நடத்துவது..? நாடே வெங்காயத்திற்கு தட்டுப்பாடு இருக்கு என கூறி வந்தாலும் எங்களிடமிருந்து ஒரு கிலோ வெங்காயம் வெறும் 8 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம் என கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார். இவருடைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.