ஒன் பிளஸ் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாயில் செல்போன்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வழங்க தொடங்கியுள்ளனர்.
அதேபோல் மொபைல் நிறுவனங்களும் ஆஃபர்களையும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் லேட்டஸ் அதிரடியை வழங்கியிருப்பது ஒன் பிளஸ் நிறுவனம். இந்த நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாயில் செல்போன்களை வழங்க உள்ளது.
இந்த சலுகையின்கீழ், அதன் லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 3, சாஃப்ட், கோல்டு மாடல்களும் அடங்கும் என்று ஒன் பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.
வருகின்ற 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு மாலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் இந்த விற்பனை நடைபெறும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு ஒன் பிளஸ் நிறுவனத்தின் பயன்பாட்டாளர்களாக இருக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல், முன் பதிவு செய்யப்பட்டு, அதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குத்தான் இந்த சலுகை கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சலுகைக்கான முன்பதிவுகள் அனைத்து ஒன் பிளஸ் நிறுவனத்தின் கடைகளிலும் நடைபெற்று வருறது. இதேபோல், ஜியோமி நிறுவனமும் ஒரு ரூபாய்க்க செல்போன் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
