குழந்தைகள், இளைஞ்ர்கள், பெரியவர்கள் என அனைவருக்குமே சுற்று சூழல் மற்றும் சில காரணங்களால் நோய் தோற்று, ஏற்படுவது அதிகரிக்கிறது. இவற்றை வீட்டில் நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை கொண்டு சரி செய்து விடமால் என முன்னோர்கள் சொல்லியும் அதனை பயன்படுத்துபவர்கள் வெகு சிலர் தான். இதற்கு முக்கிய காரணம் இது பற்றிய புரிதல் இல்லாதது என்றும் கூறலாம். 

அவ்வளவு ஏன் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு டம்பளர் வெந்நீர் மற்றும் 7 மிளகு தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் தீரும். 

மிளகின் பயன்கள்:

மிளகில் ஆன்டி-பாக்டீரியல் சக்தி அதிக அளவில் இருப்பதால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும். தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால், மிளகில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை உடலினுள் நுழையும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, உடலில் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களை தடுத்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

மேலும் ஆஸ்துமா, நாள்பட்ட மூட்டு வலி போன்றவை இருந்தால், தினமும் அவர்கள் மிளகு அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனைகள் குணமடையும்.

மிளகில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களான, நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.  மிளகு ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் இருக்கும் ப்ரீ-ராடிக்கல்களை வெளியேற்றிவிடும்.

வயிறு சரியில்லாதவர்கள் மிளகு சாப்பிட்டால் ஏனெனில் மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள், வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும். மேலும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றையும் போக்கும். இதனால் தான் வயிற்று பிரச்சனையால் அவதி படுபவர்களுக்கு மிளகு ரசம் வைத்து கொடுக்க சொல்கிறார்கள். 

உடல் எடையைக் குறைக்க நினைத்தால், மிளகை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். ஏனெனில் மிளகு உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டது.

அதிலும் எடையைக் குறைக்க உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை மேற்கொண்டு வரும் போது, இதனை சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும். அதுமட்டுமின்றி, மிளகு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தொப்பையைக் கரைக்கவும் உதவும்.