ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது, வெளிப்படையாக இருப்பது எல்லாம் நல்லதுதான். எனினும் சிலவற்றை சொல்லாமல் இருப்பது தான் நல்லது. இதன் மூலம் மனக்கசப்புகள், சண்டைகளைத் தவிர்க்க முடியும்.

 

பிரேக் அப்

பெரும்பாலான பிரேக் அப்கள் ஆண், பெண் இருவருக்குமே பெரும் வலியோடுதான் நடக்கிறது. முடிந்த வரையில், புதிய துணையிடம் பழைய காதலால் பட்ட துயரங்களை பகிராமல் இருப்பதுதான் நல்லது. ஏனெனில் காதலரை மறந்துவிட்டீர்களா இல்லையா என்ற சந்தேகம் ஏற்படும்.

 

செல்போன்

அழகியல் சார்ந்தவை, சொந்தவிஷயங்கள் உள்ளிட்டவை பாதுகாத்து - பார்த்து ரசிக்க செல்ஃபோன்கள் தான் முக்கியமானவையாக இருக்கின்றன. செல்போனில் மறைத்து வைக்காமல் இருப்பதும், அப்படியே வைத்திருந்தால், என்னுடைய செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடுவதும் நல்லது.

 

செக்ஸ்

உங்களுக்கு யாரையாவது பார்க்கிற பொழுது, பிடித்திருக்கிறது என்றால் நேசிக்கலாம். ஆனால் அவர் உடல் ரீதியாக அனுகினால் உடனே துணையிடம் பகிர்ந்து கொண்டுவிட வேண்டும்.

 

வாகனங்கள் ஓட்டும்போது

 

வாகனங்கள் ஓட்டும்போது துணை யாருக்காவது செல்போனில் மெசேஜ் அனுப்பினாலோ, கை காட்டி யாருக்காவது சிக்னல் செய்தாலோ உடனடியாக கண்டிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் துணை பற்றி உங்களுக்குப் பின்னால், மற்றவர்கள் தவறாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.