பாலேஸ்வரம் ஆதரவற்ற முதியோர் விடுதி மர்மங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயிரத்து 590 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுவதாகவும், உயிரிழந்தவர்கள் முறையாகப் புதைக்கப்படவோ, பதிவு செய்யப்படவோ இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடல்கள் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்பனை செய்யப்படுவதாகவும்,மேலும் இறந்த  முதியவர்களின் உடல்களை மறுத்து ஆய்வுக்கு பயன்படுத்தி வந்ததாகவும்,  எங்காவது ஆதரவற்ற முதியவர்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக அவர்களை செயின்ட் ஜான்ஸ் கருணை  இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம்  ஆம்புலனஸ் மூலம்  அளித்து செல்லப்பட்ட அனைத்து  விவரமும் வெளியானது 

பின்னர் இது குறித்த வழக்கு விசாரணை  நடைபெற்று வந்த  நிலையில்,இது தொடர்பாக சி.பி.ஐ. போன்ற தன்னிச்சையான அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் 3 வாரகாலத்துக்குள் தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்