தொப்புள்  பகுதியில் ஆயில் மசாஜ் .....!!!

நமது தொப்புள் பகுதி நெரடியாக நமது முகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

அதாவது,  இந்த பகுதியை குறிப்பிட்ட ஆயில்களால் மசாஜ் செய்வதானால் முகத்தில் உருவாகும் முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் பல வகையானவற்றை குணப்படுத்த முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.

1. தொப்புள் பகுதியில் வேப்ப எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதனால் முகத்தில் வரும் பருக்களை கட்டுப்படுத்த முடியும்.

2. கடுகு எண்ணெய் கொண்டு தொப்புள் பகுதியை மசாஜ் செய்வதனால் உதட்டில் வரும் வெடிப்புகளை கட்டுப்படுத்த முடியும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

3. பாதாம் ஆயில் கொண்டு தொப்புள் பகுதியை மசாஜ் செய்வதால் முகம் மேன்மேலும் வசீகரம் பெறுகிறது. சுருக்கங்கள் நாளடைவில் காணாமல் போகிறது.

4. தொப்புள் பகுதியில் எலுமிச்சை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதனால் முகம் கருமை அடைவதை தடுக்க முடியும், மட்டுமின்றி இயற்கையாகவே இருக்கும் நிறத்தில் கூடுதல் பொலிவு கிட்டும்.

5. வேப்ப எண்ணெயை தொப்புள் பகுதியில் மசாஜ் செய்வதனால் முகத்தில் தோன்று வெண்புள்ளிகளை வராமல் தடுக்க முடியும்.

6. பசுவின் நெய் கொண்டு தொப்புள் பகுதியை மசாஜ் செய்வதனால் முகம் மிருதுவாகும், காற்று மாசு மற்றும் மன உளைச்சலால் முகத்தில் ஏற்படும் மாறுதல்களை இது நிவர்த்தி செய்யும்.

7. பிராந்தியில் தோய்த்த பஞ்சை தொப்புள் பகுதியில் வைத்திருந்து ஓய்வெடுப்பதனால் மாதவிடாய் நேரத்து வலி மற்றும் தசைப்பிடிப்பில் இருந்து நிவாரணம் கிட்டும்.

8. ஆல்கஹாலில் தோய்த்த பஞ்சை தொப்புள் குழியில் வைத்திருப்பதால் காய்ச்சல், சளி, மூக்கொழுகுதல் என தொல்லைகளில் இருந்து விடுதல் பெறலாம்.   

குழந்தைகளுக்கு  வயிறு  வலி  என்றால்  கூட , நம்  வீட்டில் உள்ள  பெரியவர்கள், எண்ணெய் வைத்து தொப்புள் சுற்றி   மசாஜ்   செய்கிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. 

காலங்காலம் தொட்டே , தொப்புளை  சுற்றி  மசாஜ் செய்வது  வழக்கத்தில் உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.