ஒத்த ரூபா செலவு பண்ண வேண்டாம்... வீட்டுக்கு வந்த உடனே இதை பண்ணுங்க போதும்..! 

முகத்தை அழகாக வைத்துக் கொள்ள நம்மில் பல பேர் என்ன செய்வார்கள் சொல்லுங்கள்... அழகு நிலையம் செல்வது, அதற்காக பல்வேறு சிகிச்சை எடுத்துக்கொள்வது... சில ஆயின்மென்ட் தடவி.. இருக்குற அழகை மேலும் கெடுத்துக்கொள்வது...

ஆனால் இந்த ரிஸ்க் எதுவும் எடுக்காமல், தினமும் வீட்டிலேயே இதை செய்து பாருங்கள்.. வித்தியாசத்தை உணருங்கள்... உருளைக்கிழங்கு சாருடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.. முகம் அழகாக மாறும். இளஞ்சூடான பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் மிகவும் பிரகாசமாக இருக்கும். 

நன்கு பழுத்த பப்பாளி பழத்தின் சாற்றை முகத்தில் தேய்த்தால் வடுக்கள் மாறி முகம் பொலிவு பெறும். முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடித்து தடவி உலரும் வரை விட்டு, குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முக சுருக்கங்கள் மறையும். தயிரை முகத்தில் பூசி, ஊற வைத்துக் குளித்தால் முகம் பளப்பளப்பாகும்.

ஆரஞ்சு பழத்தோலை காய வைத்து, பொடி செய்து அதை மோரில் கலந்து வர முகம் பளப்பளப்பாகும். கசகசாவை ஊற வைத்தும் அரைத்து முகத்தில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ முகச்சுருக்கங்கள் மறையும்.பாலேட்டை நன்றாக தேய்த்து ஊற விட்டு முகம் கழுவ முகம் மென்மையுடன் பிரகாசமாக மாறும்.பாலுடன் சில துளிகள் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெரும் 

கேரட், ஆரஞ்சு சாற்றுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவி 15  நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறாக செய்து வந்தால் நம் முகம் மிகவும் அழகாக மாறும். இது போன்ற மேலும் பல சூப்பர் டிப்ஸ் அடுத்த பதிவில் பார்க்கலாம்.