சுகர் இருப்பவர்கள் இனி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டாம்..! ஏன் தெரியுமா..?

ரத்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலினை ஊசியாக எடுத்துக் கொள்வதற்கு மாறாக தற்போது மாத்திரையை எடுத்துக்கொண்டாலே போதுமென அமெரிக்க ஆய்வாளர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

சர்க்கரை நோயில் டைப் 1 டைப் 2 என இரண்டு வகை உள்ளது. டைப் 1 வகை ஒருசிலருக்கு பிறப்பிலிருந்தே இருக்கும். டைப் 2 சர்க்கரை நோய் என்பது பரம்பரை பரம்பரையாக இருப்பதும் குறிப்பாக நாற்பது வயதை கடக்கும்போது இன்சுலின் சுரப்பது குறைவாகி இரத்த சர்க்கரை நோய் உண்டாகும்.ரத்த சர்க்கரை நோய்க்கு இன்சுலினை எடுத்துக் கொள்வதில் இரண்டு முறைகள் உள்ளன.

அதாவது குழந்தை பிறக்கும் போதிலிருந்தே அல்லது சிறுவயதிலேயே சர்க்கரை நோய்க்கு உள்ளானால் இதனை டைப் 1 என்று கூறப்படுகிறது. இன்சுலின் மருந்தை ஊசியாக எடுத்துக்கொள்பவர்கள், இதற்கு மாறாக மாத்திரை போதுமானது என கண்டுபிடித்துள்ளனர்.

இதனை உட்கொண்டால் நேரடியாக சிறுகுடலை அடைந்து செயல்பட தொடங்கும். இதனை பன்றிக்கு செலுத்தி இந்த ஆய்வை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர் அமெரிக்க ஆய்வாளர்கள். விரைவில் இந்த முறை பயன்பாட்டிற்கு வரும் தருணத்தில் சிகிச்சை முறைக்கு எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.