ரிசர்வ் வங்கி அதிரடி..! வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு குஷியான செய்தி..! EMI கட்ட தேவையில்லை ..!

கொரோனா எதிரொலியால் நாடே ஊரடங்கு உத்தரவில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் எந்த வித சிரமத்திற்கும் ஆளாகாமல் இருக்க அடுத்து வரும் 3 மாதத்திற்கு இஎம்ஐ கட்டதேவை இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்  

முக்கிய உரை 

ரெப்போ விகிதம் 5.5% இருந்து 4.4% ஆக  குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வாடிக்கையாளர்களின் EMI குறைய வாய்ப்பு உள்ளது 

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது.ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைக்கப்பட்டு உள்ளது.தற்போது சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.கொரோனா வைரசால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.கவர்னர் 

தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.ஏற்கனவே வங்கிகள் கொடுத்த கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க இயலும் 

3 மாதத்திற்கு இ.எம்.ஐ., கட்ட தேவையில்லை.

அனைத்து வகை கடன்களுக்கும் மூன்று மாதம் தவனைகளை கட்ட அவகாசம் வழங்கப்படும்.கடன் வசூலை நிறுத்திவைக்க  வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தவணைகளையும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். கொரோனா பாதிப்பால் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான 3 மாத தவணைகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. விலக்கு அளிக்கப்பட்ட மாதங்களின் தவணைகளை 3 மாதம் கழித்து கட்ட வேண்டும்.கடன் செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கை கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது  

2019 ஆம் ஆண்டில் சரிவை கண்ட சர்வதேச பொருளாதாரம் 2020-ல் மீளும் என்ற நம்பிக்கை கொரோனா வைரஸ் பாதிப்பால் தகர்ந்தது. அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும். அதை பற்றி மக்கள் கவலை பட வேண்டாம் என தெரிவித்து உள்ளார் ஆளுநர்.

கொரோனா எதிரொலியால் பொருளாதாரம் முடங்கி உள்ள  நிலையில் மக்களுக்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கையிலும் மத்திய மாநில அரசு திறம்பட செயலாற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கி அறிவிப்பு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி தருவதாக அமைந்து உள்ளது .