Asianet News TamilAsianet News Tamil

இனி யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது... வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!

யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிப்பது போன்றவை மீண்டும் மீண்டும் பிரச்சனைகளை உண்டாக்கும் என்று பல துறைகளும் மத்திய அரசிடம் எடுத்துரைத்து வந்தன.
 

No more charges for UPI money transactions ... Federal order to banks
Author
Tamil Nadu, First Published Aug 31, 2020, 11:38 AM IST

இனி யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
ருபே (RuPay) மற்றும் யுபிஐ UPI போன்ற சேவைகளின் மூலம் நடத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை வசூலிக்க வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளைக் கேட்டுக் கொண்டது. கொரோனாவிற்கு பிந்தைய கட்டத்தில் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய நடவடிக்கைகளை அடையாளம் காண்பது, யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிப்பது போன்றவை மீண்டும் மீண்டும் பிரச்சனைகளை உண்டாக்கும் என்று பல துறைகளும் மத்திய அரசிடம் எடுத்துரைத்து வந்தன.No more charges for UPI money transactions ... Federal order to banks

முன்னதாக யுபிஐ மூலம் செய்யப்படும் முதல் சில பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவை முந்தைய முறையின்படி வங்கிகளால் வசூலிக்கப்பட்டன. இது மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்ட முந்தைய சுற்றறிக்கையை மீறுவதாகும். வணிக தள்ளுபடி வீதம் உள்ளிட்ட எந்தவொரு கட்டணமும் பேமண்ட் அண்ட் செட்டில்மெண்ட் சட்டத்தின் பிரிவு 10-ஏ படி மின்னணு முறைகள் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு, 2020 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பொருந்தாது.No more charges for UPI money transactions ... Federal order to banks

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு மின்னணு முறைகள் மூலம் செலுத்தப்படும் வணிக தள்ளுபடி வீதம் உள்ளிட்ட எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று சுற்றறிக்கை தெளிவாகக் கூறியிருந்தாலும், சில வங்கிகள் தொடர்ந்து இத்தகைய பரிவர்த்தனைகளை வசூலிப்பது கண்டறியப்பட்டது. எனவே கடந்த, ஜனவரி 1 க்குப் பிறகு மின்னணு முறைகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் வசூலிக்கப்பட்ட எந்தவொரு கட்டணத்தையும் திருப்பித் தருமாறு நிதி அமைச்சகம் தற்போது வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios