மாலை நேரத்தில் விலை மாறாமல் விற்பனையாகும் தங்கம்..! ஆனால் வெள்ளி விலை  உயர்வு..! 

கடந்த 10 நாட்களாக ஒரு சவரன் தங்கம் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வந்தது. அதிலும் கடந்த இரு வாரங்களாக தொடர் ஏறு முகத்தில் இருந்து வந்த தங்கம் விலை தற்போது குறைந்து உள்ளது.

சென்ற வாரம் முழுவதும் ஒரு சவரன் தங்கம் விலை 30 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 33 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை ஆகும் என்ற நிலை உருவாகி உள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்ட பின், 26 ஆயிரம் ரூபாய் என இருந்த ஒரு சவரன் தங்கம் விலை இன்றைய நிலைமைக்கு 30,000 அளவில் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் 

காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 12 ரூபாய் குறைந்தும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்தும் உள்ளது. அதன் படி பார்த்தால்  ஒரு சவரன் தங்கம் விலை 29 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் மாலை நேரத்தில் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 30 பைசா அதிகரித்து  51.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.