no change in birth certificate

10 ஆம் வகுப்பிற்கு பிறகு பிறப்பு சான்றிதழில் எந்த விதமான மாற்றமும் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கருணாகரன் என்பவர், ஒரு மனுவை தாக்கல் செய்தார்.அதில் தன்னுடைய பிறப்பு சான்றிதழில் உள்ள 19.1.1989 என்பதை16.1.1992 என திருத்தம் செய்ய தேர்வுத்துறை செயலருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட மேஜிஸ்டிரேட்டில் மனு தாக்கல் செய்தார் கருணாகரன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , கருணாகரனின் கோரிக்கையை ஏற்று பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்ய உத்தரவிட்டார் .

இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த 2004 ஆம் ஆண்டு கருணாகரன் , தன்னுடைய மதிப்பெண் சான்றிதழிலும் உள்ள பிறந்த தேதியை மாற்றி தர சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், எந்த ஒரு நபரும் 10ஆம் வகுப்பை முடித்த பிறகு பிறப்புச் சான்றிதழில் பெயர் அல்லது பிறந்த தேதியில் திருத்தம் செய்ய நீதிமன்றங்களுக்கோ, கல்வித்துறை அதிகாரிகளுக்கோ அதிகாரம் இல்லை என குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தார் .

ஸ்எஸ்எல்சி விதிகள் பிரிவு 5-ன்படி, வயது மற்றும் பெயர்களில் ஏதாவது திருத்தம் இருந்தால் அந்த திருத்தத்தை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்பே செய்திருக்க வேண்டும் என சட்டம் உள்ளதாகவும் , இனி இது போன்ற எந்த மாற்றத்தையும் 1௦ ஆம் வகுப்பு படிப்பு முடிவதற்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார் .

இதன் மூலம் இனி 1௦ஆம் வகுப்பிற்கு பிறகு, பிறப்பு சான்றிதழில் உள்ள பிறந்த தேதியிலும் பெயரிலும் எந்த மாற்றமும் செய்ய முடியாது என குறிப்பிட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி கிருபாகரன்