no change in 12th syllabus
12 ஆம் வகுப்பு பாட திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிகல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே 5 வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் . ஆனால் கடைசியாக கடந்த 2௦௦5 ஆம் ஆண்டு தான் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமானது பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக் குண்டான பாட புத்தகத்தை அச்சிட்டு விட்டது .
இந்நிலையில் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள தருவாயில் , பாட புத்தகத்தில் எந்த மாற்றமும் இந்த ஆண்டு இருக்காது என தெரிவித்துள்ளனர் .
அதே வேளையில், இனி வரும் காலங்களில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கு, பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் தான் மாணவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் .
