கஜா போல் நிவர் புயல் தீவிரமாக இருக்காது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.  

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை இரண்டரை மணி அளவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையில் 6 குழுக்களும், சென்னையில் இரண்டு குழுக்களும் தயார் நிலையில் உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். நிவர் புயல் குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்’’என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.