புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போது, பண தட்டுப்பாடு காரணமாக , புத்தாண்டு கொண்டாட்டங்கள் எந்த அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொல்லப்போனால் ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் கொண்டாடப்படும் , புத்தாண்டு நிகழ்வுகள் , இந்த வருடமும் அதிகரிக்கும் என தான் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் முன்னேற்பாடாக , ஆன்லைன் புக்கிங் தற்போது சூடு பிடித்துள்ளது. அதாவது, புத்தாண்டை ஒட்டி, பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் பப், டிஜெ என அனைத்திலும் இன்றைய இளசுகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனைதொடர்ந்து, இப்பொழுதே ஆன்லைன் புக்கிங் சூடு பிடித்துள்ளதாம் .......ரொக்கமில்லா பரிவர்த்தனை ( கிரெடிட் / டெபிட் ) கார்டை பயன்படுத்தி , ஆன்லைன் புக்கிங் செய்பவர்களுக்கு, புதிய2000 ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை என்ற கவலை இல்லை என்பதாலும், அதே சமயத்தில் வசதி படைத்தவர்களுக்கு, ஸ்டார் ஓட்டல்களில் எப்பொழுதும் கொண்டாட்டம் , கொண்டாட்டமாக தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

 குறிப்பு : பப் பார்ட்டிகளில், புத்தாண்டு கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்கும் திட்டம் கடந்த ஆண்டு 24 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 29 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.