கொரோனா எதிரொலி..! வெளிவரும் அடுத்தடுத்த விவரங்கள்!

இந்தியாவில் அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம்  உள்ளது. தமிழகத்தில் மட்டும் 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கும், நெல்லையில் 36 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் வைரஸ் தொற்று அறிகுறியுடன் சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டுகளில் தங்கி, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு,  நாளொன்றுக்கு 9 வேளை, சிறப்பு உணவு, வழங்கப்பட்டு வருகிறது.
  • மஹாராஷ்டிராவில் 11 சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது 
  • காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், பால் கடைகள் ஏற்கனவே அறிவித்த கால கட்டத்தில் திறந்திருக்க அனுமதி நீட்டிகப்பட்டு உள்ளது 

  • சலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதி
  • மருத்துவமனைக்கு இருசக்கரவாகனத்தில் செல்ல தடை ஆம்புலன்சில் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது 
  • மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே மருந்து கொடுக்க மருந்த‌கங்களுக்கு உத்தரவு. மற்றவர்கள் எளிதாக மருந்து வாங்க முடியாது 

  • இந்தியாவில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்தை நெருங்குகிறது. உயிரிழப்பு 62 ஆக அதிகரிப்பு.163 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் தமிழகத்தில் கட்டுக்கோப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் டெல்லியில் மத கூட்டத்தில் கலந்துக்கொண்டு தமிழகம் திரும்பிய பெரும்பாலோனோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.