500  ரூபாய் நோட்டு மாடலில் புது “மணி பர்ஸ்” .....!!! விலை ரூ 17  மட்டுமே.....!!!

ரூபாய்   நோட்டு குறித்த பிரதமரின் அறிவிப்பு  வெளியானவுடன், பழைய 500,1000 ரூபாய்  நோட்டுகள்  எல்லாம்  தற்போது,  ஒரு வித  மாடலாக  மாறி வருகிறது.

அதாவது, பழைய 500,1000 ரூபாய் நோட்டு  போன்ற மாடலில்  தற்போது , நாம் பொதுவாக  பயன்படுத்தும்,  “மணி பர்ஸ் “ தயாரித்து  விற்கின்றனர்.

காலத்திற்கு ஏற்ப  மாறவேண்டியதுதான் ......அதனால்  தான் என்னமோ,  காலத்திற்கு ஏற்ப  செல்லாது நோட்டு என்ற வுடனே , அச்சி அசல் போல், 500 ரூபாய்  போன்ற தாளில், மிக அழகாக  பர்ஸ்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த  பர்ஸ் பார்க்கும்  போது  பணத்தை  தன் பாக்கெட்டில்  வைத்துள்ளது  போன்றே இருக்கும்.

இந்த  பர்ஸின்   விலை  வெறும் 17  ரூபாய்  மட்டுமே. தற்போது  புது மாடலாக  ரூபாய் நோட்டில்  தயாரிக்கப்பட்டுள்ள  இந்த  பர்ஸ்  , இளைஞர்களிடையே  நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.

 சென்னை  தி  நகரில் , பிரபல  கடையில்  கிடைக்கும்  இந்த  பர்ஸ் , விற்பனையில்  சூடு பிடிக்க  ஆரம்பித்துள்ளது.