புற்றுநோயை குணப்படுத்த உலகமெங்கும் பெரும் சவாலாக இருப்பது சிகிச்சைமுறை மட்டுமே...

புற்று நோயை குணப்படுத்த இதுவரை பல சிகிச்சை முறை இருந்தாலும் கூட, அதனை முழுமையாக குணப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இந்த நிலையில், வரும் 2020ஆம் ஆண்டுக்குள் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து அறிமுகம் செய்யப்படும் என இஸ்ரேலைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

அதாவது, AEBi என்கிற நிறுவனம் புற்றுநோயை முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்றும், இந்த மருந்தந்தை எடுத்துக்கொள்ளும் போது சில குறிப்பிட்ட நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் இருக்கும் என்றும் கூறுகின்றனர். Multi Target Toxin (MuTaTo) என்கிற இந்த நவீன முறை சிகிச்சையை எடுத்துக்கொண்டால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாமல் புற்றுநோய் முழுமையாக குணப்படுத்த முடியும் என இந்த நிறுவனத்தின் தலைவர் ஆரிடார் தெரிவித்துள்ளார்  

தற்போது உள்ள மருந்துகள் புற்றுநோய் செல்களை ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டும் அழிக்க கூடியதாகவும், ஒரே திசையில் செயல்படுவதாகவும் உள்ளது. ஆனால் இந்த மருந்து மூன்று திசைகளிலும் செயல்பட்டு, புற்றுநோய் செல்களை மிக விரைவில் அழித்து விடும் தன்மை கொண்டதாக இருக்கும்.

தற்போது பரிசோதனையில் உள்ள இந்த மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும், உலக அளவில் கிடைக்கக்கூடிய புற்றுநோய்க்கான மருந்தை விட இது விலை குறைவாக தான் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது