4 பேர் தாங்கும் வசதியுடன் செவ்வாய் கிரகத்தில் “ ஐஸ் வீடு “.....!
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிகளவில் பூமியை சுற்றிவரும் கிரகங்களை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் . அந்த வகையில், செவ்வாய் கிரகத்தில் அதிக நேரம் ஆராய்ச்சி மேற்கொள்வது கடினம். அங்கு அதிக அளவில் கதிர்வீச்சு உள்ளதாக தெரிகிறது.
இதன் விளைவாக , விண்வெளி வீரர்கள் அதிக நேரம் செவ்வாய் கிரகத்தில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள முடியாது.
ஆனால், இதற்கெல்லாம் ஒரு முடிவாக, செவ்வாய் கிரகத்திலேயே சிறிது காலம் தங்கி , ஆராய்ச்சி மேற்கொள்ள ஏதுவாக தற்போது “ ஐஸ் வீடு “ அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஐஸ் வீட்டில் , நான்கு விண்வெளி வீரர்கள் தங்க முடியும். இதில் வேலை செய்வதற்கு என தனி கேபின் மற்றும் உறங்குவதற்கு என தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஐஸ் வீட்டின் மீது , எந்த கதிர்வீச்சு அதிகமாக பட்டாலும், அதை தாங்க கூடிய அளவுக்கு உறுதியான பூச்சு அதன் மீது பூசப்பட்டுள்ளதாம்.
விஞ்ஞானம் எங்கேயோ போயாச்சி....
