கேம் ஆப்ஸ் உடன்  சந்தைக்கு  வந்துள்ள “ புது  உடற்பயிற்சி கருவி “

நாம்  வாழும் இந்த வாழ்க்கை முறைக்கு,  தற்போது உடற்பயிற்சி என்பது  மிகவும் தேவையான ஒன்று.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு  உறுப்பும்  , உடற்பயிற்சியின்  போது  அசையும்  விதமாக , உச்சரிக்க  கூட முடியாத  அளவுக்கு பல,  உடற்பயிற்சி   இயந்திரங்கள்  வந்து கொண்டே இருக்கிறது.

நகரங்களில் , காலையில்  எழுந்து  நடைபயிற்சி  மேற்கொள்வது கூட கடினமாக மாறி உள்ளது. நடைபயிற்சி மேற்கொள்ள  சரியான  இடம் கிடைக்க பெறாததாலும், இயந்திர  வாழ்கையை  நாம்  வாழ்ந்து வருவதால் ,  நடை பயிற்சி  மேற்கொள்ள  தற்போது  நேரம் கூட  கிடைப்பதில்லை.

இது போன்றவர்கள் , பயன்பெறும் வகையில் தற்போது,  பல  டெக்னாலஜியுடன்   உடற்பயிற்சி  கருவிகள்  வந்துகொண்டே  இருக்கிறது. தற்போது,  ஒரு புதிய வகை   உடற்பயிற்சி கருவி   வெளிவந்துள்ளது.

இந்த  உடற்பயிற்சி கருவியை பயன்படுத்தி, உடற்பயிற்சியில்  ஈடுபடும் போது,  அந்த கருவியின் நடுவே, ஸ்மார்ட் போனை  வைத்து  விளையாடினால்,  அதற்கேற்றார் போல்  நம்  உடல்  அசையும்.

அதாவது, இந்த உடற்பயிற்சி கருவி  வாங்கும் போது,  ஒரு கேம் அப்ளிகேஷன் கொடுக்கிறார்கள்.  இந்த  அப்ளிகேஷன்  பயன்படுத்தி  அந்த  கேம் விளையாடினால் , நம்  உடல்  அதற்கேற்றவாறு  அசையும் ....