Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று... சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..?

கொரோனா கொன்று குவித்து வரும் நிலையில் சீனாவில் தற்போது புருசெல்லோசிஸ் என்ற புதிய தொற்று பாக்டீரியா பரவி அதிர்ச்சியளித்து வருகிறது. 
 

New disease worse than corona ... spreading from China to India ..?
Author
India, First Published Sep 22, 2020, 6:38 PM IST

கொரோனா கொன்று குவித்து வரும் நிலையில் சீனாவில் தற்போது புருசெல்லோசிஸ் என்ற புதிய தொற்று பாக்டீரியா பரவி அதிர்ச்சியளித்து வருகிறது. 

ப்ரூசெல்லா என்ற பாக்டீரியாவைச் சுமக்கும் கால்நடைகளுடனான தொடர்பு காரணமாக ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட விலங்கின் திரவத்துடன் நேரடி தொடர்பு கொண்டு அல்லது அசுத்தமான காற்றை உள்ளிழுப்பதன் மூலமும் இது பரவுகிறது. இந்த நோய் இந்தியாவில் நுழைந்து மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதாக சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. இது மற்றொரு தொற்றுநோயாகவும், கொரோனா வைரஸை விட மிகவும் கடுமையானதாகவும் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள்.New disease worse than corona ... spreading from China to India ..?

கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு பயோ-ஃபார்மாட்டிகல் நிறுவனத்தில் கசிவு ஏற்பட்டதால் இந்த பாக்டீரியா தொற்று பரவத் தொடங்கியது. லான்சோவின் தேசிய சுகாதார ஆணையத்தின் (என்.எச்.சி) கருத்துப்படி, கன்சு மாகாணத்தின் தலைநகரில் சுமார் 3,245 பேருக்கு புருசெல்லோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

காய்ச்சல், மூட்டு வலி, சோர்வு, பசியின்மை, தலைவலி, வியர்வை போன்றவை ப்ரூசெல்லோசிஸின் அறிகுறிகள் ஆகும். நோயால் பாதிக்கப்பட்ட சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை அறிகுறிகள் தோன்றக்கூடும். மெலும் இது உடலுறவு மூலம் பரவலாம் என்றும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மூலம், குழந்தைகளுக்கு பாக்டீரியாவை பரவ வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் தோலில் கடுமையான வெட்டு அல்லது கீறல் இருந்தால், நீங்கள் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கக்கூடும். மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கு இந்த புதிய தொற்றுநோயால் அதிக ஆபத்து இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சிரித்துள்ளனர்.

New disease worse than corona ... spreading from China to India ..?

இந்தியாவில் ஏற்கனவே இந்த பாக்டீரியா இருப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். மூத்த ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா நிபுணர் டாக்டர் விகார் ஷேக் இதுகுறித்து பேசிய போது, “உலகம் ஒரு புதிய தொற்றுநோயின் தொடக்கத்தைப் பார்க்க தொடங்கியுள்ளது. வடமேற்கு சீனாவில் புருசெல்லோசிஸ் பாக்டீரியாவின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை குறைவாக மதிப்பிட முடியாது. ஏனெனில் கொரோனாவைப் போலவே இது அண்டை நாடுகளுக்கும் பரவக்கூடும்” என்று தெரிவித்தார்.

இந்த பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் சுமார் 2 சதவீதமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நாட்டில் ஏற்கனவே ஒரு நோய் இருக்கும் நிலையில், இது வேகமாக ஒரு தொற்றுநோயாக மாறி அது மேலும் கடுமையானதாகிவிடும். எனவே, அதிக காய்ச்சல் உள்ள நோயாளிகளை கொரோனா மற்றும் புருசெல்லோசிஸ் ஆகிய இரண்டிற்கும் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும்.New disease worse than corona ... spreading from China to India ..?

கொரோனா வைரஸுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்படும் நிலையில், இந்த பாக்டீரியா தொற்றுக்கு இரத்த மாதிரி மற்றும் ஐ.ஜி.எம் ஆன்டிபாடிகள் சோதனை செய்யப்பட வேண்டும். கொரோனாவை போலவே, தற்போது, ​​ப்ரூசெல்லோசிஸுக்கு எந்தவொரு பயனுள்ள தடுப்பூசியும் கிடைக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios