உருவானது "புல் புல்" புயல்..! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை வாய்ப்பு தெரியுமா..? 

வங்கக்கடலில் புல்புல் புயல் உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகி உள்ளது என்றும், அதற்கு புல் புல் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இந்த புயல் வடமேற்கு திசையிலிருந்து வட திசையை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக நாளை முதல் வரும் 10ஆம் தேதி வரையிலான 3 நாடுகள் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்  என்றும் நாகை காரைக்கால் ராமேஸ்வரம் கடலூர் புதுவை உள்ளிட்ட துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதியதாக உருவாகி  உள்ள புல் புல் புயலால் தமிழகத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.