பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர விதிக்கப்பட்ட தடை ஜனவரி 7ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. டிசம்பர் 31ம் தேதி இருந்த தடை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் மற்றும் தெற்கு பிரிட்டன் பகுதிகளில், புதிய கொரோனா தொற்று பரவல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்தது. அங்கு, புதிய வீரியத்துடன் கூடிய, புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதனையடுத்து, கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, பல்வேறு நாடுகளும், பிரிட்டனுக்கான விமான சேவையை ரத்து செய்யப்பட்டன.  இந்தியா - பிரிட்டன் இடையிலான விமானங்கள், கடந்த 23ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த விமான சேவைகளுக்கான தடை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டுவிட்டர் பக்கத்தில';- பிரிட்டனில் இருந்து விமான சேவை ஜன.,7ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான சேவைக்கான தடை, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.