வெறும் 5 ரூபாயில் மதுரை முழுக்க சுத்தி வரலாம்..! கலக்கும் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர்..! 

மிகக் குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை வழங்க மதுரை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது 5 ரூபாய் கட்டண பேருந்து. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் அதிரடி நடவடிக்கை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உள்ளது

புதியதாக விடப்பட்டுள்ள R7 பேருந்து, தல்லாகுளம், ஆரப்பாளையம், ஆரப்பாளையம் கிராஸ், ரயில் நிலையம், பெரியார் நிலையம், தெற்கு வாசல், கோரிபாளையம், தல்லாகுளம், எம்ஜிஆர் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கபட உள்ளது. ஆக மொத்தத்தில் மதுரை மாவட்டம் உள்ள பல முக்கிய பகுதிகளுக்கு இந்த பேருந்து வசதி செய்யப்பட்டு உள்ளது

இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், வெறும் ரூ.5 கட்டணத்தில், மதுரை முழுவதும் பயணம் மேற்கொள்ள மக்களுக்கு ஏதுவாக அமைந்து உள்ளது இந்த சேவை. குறைந்த கட்டணத்தில் மதுரை முழுவதும் வலம் வரும் இந்த புதிய பேருந்தில் பயணம் மேற்கொள்ள மக்கள் அதிகம் ஆர்வம் காண்பிக்கின்றனர். மேலும் அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து உள்ளனர் மதுரை மக்கள்.