நீருக்குள் பிரசவம்..!!!! மூச்சித்திணறி இறந்த பச்சிளங்குழந்தை....கொடூரத்தின் உச்சக்கட்டம் ..!!!

நேச்சுரோபதி என்ற பெயரில் நீருக்குள் வைத்து பிரசவம் பார்க்கும் முறையை , கேரளாவில் ஒரு தம்பதியினர் நடத்தி வந்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் நேச்சுரோபதி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த மருத்துவமனையில், கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி ஹசீனா முகமது என்ற கர்ப்பிணி பெண்ணை, தண்ணீர் தொட்டியில் வைத்து அவளுக்கு பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.

இதில் குழந்தை பரிதாபமாக மூச்சி திணறி இறந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல், தாய்க்கும் அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளதால், வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் மருத்துவமனை உரிமையாளரான அப்பாஸ் ஹுசைன் மற்றும் மனைவி,மாமனார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

குறிப்பு: பிரசவத்திற்கு முன்பு , கர்ப்பிணி தாய்க்கு எந்த ஒரு மருந்தும் கொடுக்காமல், வெறும் இளநீரும்,சில பச்சிலைகளும் மட்டுமே கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .