ஒவ்வொரு நாளும் புது புது ஆப்ஸ் வந்து கொண்டே இருக்கிறது. எதை வாங்க வேண்டும் என்றாலும் , எங்கு வாங்க வேண்டும் என்றாலும்..........அனைத்தும் இன்னைக்கு ஆப்ஸ் மூலமாகவே பயன்படுத்த முடிகிறது.
இந்த வரிசையில், தற்போது எங்கெங்கு கழிப்பிடம் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு எளிமையாக தெரிவிக்கும் வகையில் கூகுள் மேப் போன்ற வரைப்பட ஆப்-பை அறிமுகம் செய்ய உள்ளது மத்திய அரசு .
அதுமட்டும் இல்லாமல், இந்த ஆப்ஸ் பயன்படுத்தி அருகில் உள்ள உணவகம், ஏ.டி.எம் மையம் உள்ளிட்டவற்றையும் அறிந்துக்கொள்ள முடியும் என சொல்கிறது.
இந்த ஆப்ஸ் மூலம், சுமார் 5,100 கழிப்பிடம் இருக்கும் இடங்களை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பவர் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்ய உள்ள இந்த திட்டம் மத்திய ஊரக வளர்ச்சித்துறை திட்டத்தின் கீழ் செயல்படுத்தபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் , இது தவிர பொதுமக்களின் வசதிக்கேற்ப கழிப்பறைகள், பிரபல வளாககங்கள், பெட்ரோல் பங்குகள், ஷாப்பிங் மால்கள், உட்பட அனைத்தும் கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம்
நல்ல விஷயம் ....வரவேற்கலாம் .................!!!
