அப்படியா சங்கதி...!!! உடனே அமலுக்கு வந்தால் எல்லோருக்கும் “ ரொம்ப ரொம்ப நல்லது”..!!
இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி அப்ளிகேஷன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு , உணவு ஆகியவற்றை மட்டும் பதிவு செய்யும் ஒரு வசதி உள்ளது.
ஆனால் தற்போது, மேலும் பல கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகபோகுது ஒரு புதிய ஆப்.
ரயிலில் பயணம் செய்ய, முன்பதிவு செய்வது முதல், அனைத்து தேவையையும் இனி ஒரே ஆப்ஸ் மூலம் செய்ய முடியும்.
இந்த புது ஆப்ஸ் மூலம், இனி கால் டாக்சி,போர்ட்டர்,ஹோட்டல் அறைகள் புக் செய்தல் போன்ற 17 சேவைகளை ஒரே அப்ளிகேஷன் மூலமாக பெறும் வகையில் புதிய ஆப்ஸ் அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
