புதிய 500 ரூபாயில் “ சூப்பர் அம்சம்கள் “ என்னென்ன ....??
500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிச்ச பிறகு, தற்போது, புது 2,000 ரூபாய் நோட்டுகள் வர தொடங்கிவிட்டது. இந்நிலையில், புது 500 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் நாடாளுமன்றம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் நேற்று புதிய 500 ரூபாய் வெளியிடப் பட்டதாக ட்விட்டர் சமூக வலைதளம் மூலம் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
500 ரூபாயில் “ சூப்பர் அம்சம்கள்
ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம் பெற்றுள்ளது...
தூய்மை இந்தியா குறிக்கும் பொருட்டு, அச்சடிக்கப்பட்ட ஆண்டான 2016 எனவும் குறிப்பிடப் பட்டிருக்கும்.
சாம்பல் வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது
அதாவது, பழைய 500 ரூபாய் நோட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பல பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த நோட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
