இந்தியாவை   கிண்டல்  செய்ததா  நாசா.....? உண்மை என்ன ?

நாடு முழுவதும்,   பழைய ரூபாய்  நோட்டுகள்  செல்லாது என  அறிவிக்கபட்டபின்,  பொதுமக்கள்  பல  இன்னல்களுக்கு ஆளானார்கள்.......

அதாவது நீண்ட வரிசையில் ஏ டி எம்  சென்டரில் காத்துகொண்டிருக்கும்  காட்சியை  கொச்சை படுத்தும் விதமாக , இந்திய வரைப்படத்தையே கிண்டல்  செய்துள்ளனர்.

அதாவது, ரூபாய் நோட்டுக்கள் விவகாரம் தொடர்பாக நாசாவின் படம் என்ற பெயரில், சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

இந்த  படத்தில், இந்தியா முழுக்க ஒரே  நீண்ட  வரிசையில்  காத்திருக்கும் மக்கள்  போன்ற பிம்பம்  தெரியுமாறு  செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட நாசாவின் புகைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இது நாசாவின் புகைப்படம் அல்ல. ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தை கிண்டல் செய்யும் வகையில், கிராபிக்ஸ் மூலம் புகைப்படம் ஒன்றை உருவாக்கி, அதனை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்  என்பது  குறிப்பிடத்தக்கது....!