மக்களுக்கு நல்ல விஷயம்..! தூர்வாரப்படும் 'எருமாலன்குட்டை' குளம்.! களத்தில் இறங்கிய நல்லறம் அறக்கட்டளை..!
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள 'எருமாலன்குட்டையை' தூர்வாரும் பணியை நல்லறம் அறக்கட்டளை மேற்கொண்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள 'எருமாலன்குட்டையை' தூர்வாரும் பணியை நல்லறம் அறக்கட்டளை மேற்கொண்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி வெள்ளிமலைப்பட்டினம். இப்பகுதிக்கு அருகில் உள்ள விராலியூரில் 1.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட 'எருமாலன்குட்டை' அமைந்துள்ளது. இந்த குட்டையில் குப்பைகள் மற்றும் முட்புதர்கள் அதிகளவில் சூழ்ந்து, அங்கு குட்டை இருந்ததற்கான அடையாளமே சற்று குறைவாக இருந்தது.
இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தில், குட்டையில் தேங்கி இருந்த மிதமான தண்ணீர் கூட முழுமையாக வற்றி அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் குட்டையை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கிடையில், தற்போது இந்த குட்டையை 10 லட்சம் ரூபாயில் தூர்வாரும் பணியை, கோவை 'நல்லறம் அறக்கட்டளை' மேற்கொண்டுள்ளது. அதற்கான தொடக்க விழாவும், பூமி பூஜையும் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சேவை செம்மல் திரு.பி.அன்பரசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தற்போது 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த குட்டையானது, கரைகள் பலப்படுத்தப்பட்டு மூன்று மீட்டர் ஆழத்திற்கு தூர்வாரிய பின், சுமார் 1 கோடி லிட்டராக உயரும் அளவிற்கு இதன் கொள்ளவு உயர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.