must away search things from kids
பிள்ளைகளை அவசியம் நெருப்பு, சமைக்கும் அடுப்புகள், விளக்குகள், தீப்பெட்டிகள் மற்றும் மின்சார சாதனம் போன்றவற்றிலிருந்து தள்ளி இருக்க வைக்க வேண்டும்.
குழந்தைகள் நடக்க ஆரம்பித்துவிட்டால் உயர ஏற இறங்க ஆசைபடுவார்கள். மாடி படிகள், வீட்டு பால்கனி,கூரைகள், ஜன்னல்கள் மற்றும் விளையாடும் பகுதிகளை, பிள்ளைகள் கீழே விழுந்து விடாதவாறு கட்ட வேண்டும். இதுமட்டுமல்ல கத்திகள், கத்தரிக்கோல்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் உடைந்த கண்ணாடித்துண்டுகள் போன்றவை மிக மோசமான காயங்களை ஏற்படுத்தலாம். இது போன்ற பொருட்களை குழந்தைகள் கைகளில் சிக்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்.

சிறுபிள்ளைகள் தங்கள் கைகளில் கிடைக்கும் பொருட்களை தங்கள் வாயில் வைக்கவே விரும்புவார்கள். இப்டி சில பொருட்களை வாயில் வைக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படும். இதை தடுக்கும் வண்ணம், சிறிய பொருட்களை சிறுபிள்ளைகள் எடுக்க முடியாத வண்ணம் உயரத்திலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ வைக்க வேண்டும்.
விஷம், மருந்து பாட்டில், அமிலம் மற்றும் மண்ணெண்ணை போன்றவைகளை குடிக்கப் பயன்படும் பாட்டில்களில் வைக்கவே கூடாது. இதற்கு என்று குறிக்கப்பட்ட பாட்டில்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள் அவற்றை குடி தண்ணீர் என்று குடித்துவிட நேரிடும். மேலும் அவைகளை சிறுபிள்ளைகள் எடுக்க முடியாத வண்ணம், உயரத்திலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ வைக்க வேண்டும்.

குழந்தைகள், சிறுபிள்ளைகள் மிக குறைந்த அளவு தண்ணீரிலும் சில நிமிடங்களுக்குள்ளாக மூழ்கிவிடுவார்கள். எனவே சிறுபிள்ளைகளை ஒருபோதும் தண்ணீரிலோ அல்லது தண்ணீருக்கு அருகாமையிலோ தனியாக விட்டுவிடக்கூடாது.
சாலைகளில் செல்லும்போது, அவர்களுடன் அவசியம் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அவர்கள் நடக்க பயின்றவுடன், சாலைகளில் எப்படி பாதுகாப்பாக நடந்து செல்வது என்பதனைப்பற்றி கட்டாயம் கற்றுத் தர வேண்டும்.
