Asianet News TamilAsianet News Tamil

சொன்னா கேட்க மாட்டீங்க...! பிறகு...கால் வலி மூட்டு வலின்னு சொல்லுவிங்க...!

murungai keerai is best for bone
murungai keerai is best for bone
Author
First Published Mar 1, 2018, 4:56 PM IST


எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் முருங்கை....!!
 

முருங்கை மருத்துவம்  அற்புத வைத்தியம்...முருங்கை கஞ்சி....!!
 
 இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை கழுவி  எடுத்து ,மிக்ஸியில்  அரைத்து சாறாக்கி, அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால்,அதில் ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து, 

பின்னர் ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து, கூடவே ,இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து, சிறிது,சுக்கு ,மற்றும் ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும்

அரிசியில் முருங்கை சாறு நன்றாக  ஊறிவிடும்.அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை  காயவைத்து,சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி, தினந்தோறும்  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடித்து வரவும் 

இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்.

பயன்கள்

இந்த கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது

L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அல்லவா? அதுமட்டுமா........

பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது. 

இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது. 

அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ,உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும். அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது, L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய," disc prolapse " ஆவது ...

இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து 
முருங்கைக்கீரைதான் ....!!

அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து கொண்டுள்ள இந்த 
 முருங்கைக்கீரைக் கஞ்சியை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்.இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.

இடுப்பு வலி, முதுகு வலி குணமாகிவிடும்... முயற்சி செய்வோம்  ஆரோக்கியமாக  வாழ்வோம்...

Follow Us:
Download App:
  • android
  • ios