இந்த வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்தால் ஷாக் ஆகிடுவாரு..! படு வைரல்" முக்காலா முக்காபலா" வீடியோ..! 

காதலன் படத்தில் இடம்பெற்ற முக்காலா முக்காபலா என்ற பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் கேரளாவில் பாரம்பரிய செண்டை மேளம் பேண்ட் வாத்தியமும் கொண்டு இசைக்குழுவினர் ஒன்றாக ஒரே இடத்தில் சங்கமித்து இந்த பாடலுக்கு மிக அற்புதமாக இசை அமைத்து உள்ளனர் என்பதை...
இந்த வீடியோ அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

 

1994-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான படம் காதலன் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். முக்காலா முகாபலா என்ற பாடல் கேட்காதவர்    யாரும் இருக்கமாட்டார்கள். இந்த பாடலுக்கு பிரபுதேவா மிக அருமையாக நடனமாடுவார்.  பிரபுதேவா நடனத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்றாலும், இந்த குறிப்பிட்ட பாட்டிற்கு அனைவருமே ரசிகர்கள்தான் என்று சொல்லலாம், அந்த அளவிற்கு ஒவ்வொருவர் மனதிலும் நிற்கக்கூடிய பாடல் மற்றும் ஆடல் இது என சொல்லலாம்.

இந்த ஒரு தருணத்தில் இந்த பாடலை தேர்வு செய்து மிக அழகாக செண்டை மேளம் பேண்டு வாத்தியம் கொண்டு இந்த இசையை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தான் தற்போது கேரளாவில் வைரலாக பரவி வருகிறது. இதுதவிர தமிழக மக்கள் உற்சாகமாக இந்த வீடியோவை பார்த்து வைரல் ஆக்கி வருகின்றனர். குறிப்பாக இந்த வீடியோவை பார்த்தால் அப்படியே அசந்து விடுவார் என பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.