மகன் ஆனந்த் அம்பானி பேச்சைக் கேட்டு அழுத முகேஷ் அம்பானி; நெகிழ வைக்கும் வீடியோ!
குழந்தை பருவத்திலிருந்தே பல உடல்நலப் பிரச்சினைகளால் தனது வாழ்க்கை ஒருபோதும் மலர்ப்படுக்கையாக இருந்ததில்லை என்று ஆனந்த் அம்பானி கூறினார். அதைக் கேட்ட முகேஷ் அம்பானி மனம் உருகி கண் கலங்கினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் இதயப்பூர்வமான பேச்சைக் கேட்டு, கண் கலங்கிய உருக்கமான காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சனிக்கிழமை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானி தனது மனைவியாக இருக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டுடன் மேடையில் நின்றபடி பேசும் காட்சியை வீடியோவில் காணமுடிகிறது.
பேச்சைத் தொடங்கும்போது ஆனந்த் தனது கனவுத் திட்டமான வந்தாராவை நம்பி, அதை வெற்றியடையச் செய்ததற்காக, தனது தாய் நீடா அம்பானிக்கு நன்றி கூறினார். இந்தத் திட்டத்திற்காக தனது தாய் ஒரு நெசவாளர் போல் பணிபுரிந்தார் என்றும் தெரிவித்தார்.
சென்னையில் திடீரென முடங்கிய ஏர்டெல் மொபைல் நெட்வொர்க்!
“இவை அனைத்தும் என் அம்மாவால் உருவாக்கப்பட்டது, வேறு யாரும் இல்லை. என் அம்மா கடந்த நான்கு மாதங்களாக ஒரு நாளைக்கு 18-19 மணிநேரம் வேலை செய்தார். நான் அம்மாவுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என அவர் குறிப்பிட்டார்.
தனது அவரது உடல்நிலை குறித்துப் பேசிய ஆனந்த், குழந்தை பருவத்திலிருந்தே உடல்நலப் பிரச்சினைகளால் தனது வாழ்க்கை ஒருபோதும் மலர்ப் படுக்கையாக இருந்ததில்லை என்றார்.
“சிறுவயதிலிருந்தே நான் பல உடல்நல நெருக்கடிகளை எதிர்கொண்டேன். ஆனால் என் அப்பாவும் அம்மாவும் அதையெல்லாம் நான் உணரவே விடவில்லை. அவர்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக நிற்கிறார்கள். என் அப்பாவும் அம்மாவும் எப்போதும் நான் ஒன்றை நினைத்தால் அதைச் செய்ய முடியும் என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதைத்தான் என் அப்பாவும் அம்மாவும் எனக்குக் கற்றுக்கொண்டிருத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் எப்போதும் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
மகனின் இந்தப் பேச்சின்போது, அரங்கில் அமர்ந்திருந்த முகேஷ் அம்பானி கண்ணீர் விட்டு அழுதது கேமராவில் பதிவாகியுள்ளது.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம் ஜனவரி 19, 2023 அன்று நடந்தது. திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை நடக்கும். இந்த நிகழ்வில் விதவிதமான பல கேளிக்கை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
மூளை பவர் ரொம்ப அதிகம்! புதிய தகவல் பரிமாற்ற முறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!