பார்லிமென்டில் நான் என்ன கேள்வி கேட்கட்டும்..? வேலூர் தொகுதி மக்களிடமே ஒப்படைத்த கதிர் ஆனந்த்..! வித்தியாசமான அணுகுமுறையால் மக்களிடம் வரவேற்பு...!
துரைமுருகனின் மகனும் வேலூர் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த், பாராளுமன்றத்தில் துறை சார்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்த கேள்விகளை தன்னிடம் தெரிவிக்குமாறு மக்களுக்கு அன்பு வேண்டுகோள் வைத்து உள்ளார்.
பார்லிமென்டில் நான் என்ன கேள்வி கேட்கட்டும்..? வேலூர் தொகுதி மக்களிடமே ஒப்படைத்த கதிர் ஆனந்த்..! வித்தியாசமான அணுகுமுறையால் மக்களிடம் வரவேற்பு...!
இந்திய பொருளாதாரம் படு மோசமாக உள்ள நிலையில் நாளை 2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனால் இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.
இந்தச் சூழலில், நாட்டின் அனைத்து துறைகளும் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி கண்டு வருகின்றன. ஆட்டோமொபைல், உள்கட்டமைப்பு, உற்பத்தி துறை, கட்டுமானத் துறை, வேலையின்மை என அனைத்திலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இப்படி ஒரு நிலையில் துரைமுருகனின் மகனும் வேலூர் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த், பாராளுமன்றத்தில் துறை சார்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்த கேள்விகளை தன்னிடம் தெரிவிக்குமாறு மக்களுக்கு அன்பு வேண்டுகோள் வைத்து உள்ளார்.
அதில்
"பாராளுமன்றம் 31.1.2020 அன்று காலை ஜனாதிபதி அவர்களின் உரையை கொண்டு துவங்க இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
அதன் தொடர்ச்சியாக நான் இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் வெவ்வேறு தலைப்புகளில் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளை கேள்விகள் மூலம் அறிய இருக்கிறேன்.
பொதுமக்கள் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளை கேள்விகள் மூலம் அறிய விரும்பினால் உங்கள் கேள்விகளை எனது velloremp@kathiranand.in அஞ்சல் முகவரிக்கும், +919444376666 தொலைபேசி எண், அல்லது குறுஞ்செய்தி, அல்லது வாட்ஸ்அப் செயலி க்கும் அனுப்பினால் அவைகளைத் தொகுத்து இந்த கூட்டத்தொடரில் கேள்வி பதில் நடைபெறும் பொழுது அவைகளை லோக்சபாவில் எழுப்புவேன் என்று உறுதியளிக்கிறேன்" என தெரிவித்து உள்ளார்.
கதிர் ஆனந்தின் இந்த அணுகுமுறையால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து தொகுதி மக்களுக்கு தேவையான சில திட்டங்கள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.