"மக்கள் முன்னாடி அடிச்சே சாகடிக்கணும்"...! மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி பளீர்...! 

மிகவும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டி தொடர்பான சம்பவத்தை பற்றி மாநிலங்களவையில் ஜெயா பச்சன் ஆவேசமாக பேசினார்.

ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் செய்தவர்களை மக்கள் முன்னே தண்டிக்கப்பட வேண்டுமென கொதித்து எழுகின்றனர்.
இதுகுறித்து இன்று மாநிலங்களவையில் பல்வேறு கட்சியினர் பல கேள்விகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்பியான ஜெயா பச்சன் தெரிவிக்கும்போது, "நம் நாட்டில் நிர்பயா போன்று எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை... இது தொடர்பாக மக்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது? என்ன பதில் கூறப் போகிறது? தற்போது ஐதராபாத்தில் நடந்த சம்பவம் அனைவருக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் செய்த அந்த 4 நபர்களை மக்கள் முன்னாடியே நிற்க வைத்து அடித்தே சாகடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

இதே போன்று அதிமுக எம்பி விஜிலா சத்தியானந்த் தெரிவிக்கும் போது, "குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து இவர்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் நாட்டு மக்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் பாலியல் வன்கொடுமை போன்ற பல கொடூரமான சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கட்டாயம் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், இது குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.