mothermilk sale in online
ஆன்லைனில் விற்பனையில் “தாய்ப்பால்”...! இளம் பெண்ணின் புது முயற்சி ....
உலகஅளவில் ஆன்லைன் வர்த்தகம் அதிகம் பயன்படுத்தப் பட்டு வருகிறது. மாட்டு சாணம் ஆன்லைனில் கிடைகிறது.
அந்த வகையில் இன்றைய காலக்கட்டத்தில் எந்த பொருள் வேண்டுமென்றாலும் எளிதில் பெற முடிகிறது. ஆனால் ஒரு திருப்பு முனையாக தாயிடம் மட்டுமே கிடைக்கக் கூடிய தாய்பாலும் தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது .
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்பகுதியில்,வசிக்கும் ஒரு பெண் ஒருவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். அந்த பெண்ணிற்கு அளவுக்கு அதிகமான தாய்ப்பால் சுரப்பதாகவும், அதனை வீணாக்காமல் , தாய்ப் பால் கிடைக்காமல் வாடும் குழந்தைகளுக்கு பயன்பெறும் வகையில் ஆன்லைனில் விற்க முயற்சி மேற்கொண்டுள்ளார் .
இது குறித்த விளம்பரத்தில், ஆன் லைனில் வெறும் பால் மட்டுமே விற்பனைக்கு, அதற்காக யாரும் நேரடி சேவையை எதிர்பார்க்கக்கூடாது எனவும், அவருக்கு 2௦ வயதே ஆகிறது என்பதையும் தெரிவித்துள்ளார்
இதற்கு முன்னதாகவே, இவருக்கு சுரக்கும் இந்த அதிக தாய்ப்பாலை நிறைய தாய்மார்களிடம் கொடுத்து அவர்களது குழந்தைகளுக்கு புகட்ட தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
