சவரன் விலை புதிய உச்சம்..! "பெண்பிள்ளையே தங்கமடா" என நகை எதிர்பாரத தாயாக ( மாமியார்) இருந்தால் சந்தோஷமே..! 

புத்தாண்டு பிறந்த இரண்டு நாட்களிலேயே தங்கம் விலை புதிய உச்சம் அடைந்து சவரன் ரூ.30,344 கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 34 முதல் 35 ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும் இன்று மாலை அமெரிக்க வர்த்தகம் தொடங்க உள்ள நிலையில் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது 

ஆக மொத்தத்தில் இந்த ஆண்டு முடிவில் ஒரு சவரன் விலை அதிகபட்சமாக ரூ.36 ஆயிரம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி ஒரு தருணத்தில் செய்கூலி சேதாரம் என சேர்த்து 38 முதல் 49 ஆயிரம் ரூபாய் ஆகும் என்பது கூடுதல் தகவல். பொதுமக்களுக்கு இது மிக பெரிய  வேதனை கொடுக்கும் செய்தியாக இருந்தாலும்..நிலவரம் இதுதான். 

உலக அளவில் பொருளாதார மந்தநிலை அதிக அளவில் இருப்பதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவார்கள்.அதன் எதிரொலியாக மற்ற நாடுகளின் வர்த்தகத்தை பாதிக்கும். அதன் அடிப்படையில் மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளது என்பதால் பொதுமக்கள் பெரும் வருத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதன்காரணமாக பொதுவாகவே எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் தங்கம் வாங்குவது இயல்பே. அதிலும் குறிப்பாக திருமணம் என்றால் பெண் பிள்ளை பெற்றவர்கள், தான் பெற்ற பிள்ளைக்கு போதுமான அளவுக்கு தங்க நகையை அணிவித்து மறுவீடு அனுப்புவது வழக்கமாக உள்ளது. ஆனால் உயர்ந்து வரும் தங்க வேலையை பார்த்தால் "பெண் பிள்ளையே தங்கம்" என்ற நினைப்போடு நகை எதிர்பாராத ஒரு தாயாக மாமியார் அமைந்தால் மட்டற்ற மகிழ்ச்சியே..!