வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் இருக்க... மாறிவரும் கலாச்சாரம் இன்னொரு பக்கம் இருக்க... இன்றைய சூழ்நிலையில் மொபைல்போனை இல்லாத ஒருவரை பார்க்க முடியும் என்றால் அது உலக அதிசயம் தான். அதிலும் குறிப்பாக இந்தியர்கள் அதிக அளவில் மொபைல்போனை பயன்படுத்துகின்றனர். அதிக நேரத்தை போனிலேயே செலவிடுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு புள்ளி விவரமே... மற்ற உலக நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது செல்போன் பயன்பாடு என்பது எதற்காக பயன்படுத்த வேண்டுமோ அதற்காக மட்டும் பயன்படுத்தி பயனடைகின்றனர்.

ஆனால் பொழுதுபோக்கு சினிமா கேம்ஸ் என இது போன்ற விஷயங்களில் கவனத்தை சிதற விட்டு அதிக அளவில் பயன்படுத்துவது வேறு யாருமில்லை நம்மவர்கள் தான் இதெல்லாம் தாண்டி இன்று செல்போன் பயன்படுத்துவது மீதான மோகம் ஒரு பெண்ணை எந்த அளவிற்கு மாற்றி உள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு நடந்து உள்ளது.

வட மாநிலத்தில் பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் ஆட்டோவில் பயணம் செய்து உள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கி அவர் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கு காதில் போன் வைத்தவாறே சந்தேகத்தை கேட்டுக்கொண்டு பேசிக்கொண்டு தனியாக இறங்கி செல்ல ஆரம்பித்து விட்டார். ஆட்டோவில் தன் குழந்தையை அழைத்து வந்தோம் என்ற நினைவு கூட இல்லாமல் குழந்தையை மறந்து விட்டு செல்கிறார் அந்த பெண். ஆட்டோ ஓட்டுநர் இதைப்பார்த்து பதற்றமடைந்து குழந்தையை தூக்கிக்கொண்டு அந்தப்பெண் பின்னாடியே மேடம் மேடம் என சப்தமாக கத்திக்கொண்டு அவர் அருகே சென்று குழந்தையை கொடுக்கிறார்.

அப்போதுதான் அந்தப் பெண் திரும்பிப் பார்த்து ஓடி வந்து குழந்தையை பெற்றுக் கொள்கிறார். அதுவரையிலும் அப்பெண்ணிற்கு அதாவது ஒரு தாய்க்கு தன் குழந்தை கையில் இல்லை என்பதை கூட உணரமுடியாத அளவிற்கு ஆர்வமாக போனில் பேசிக்கொண்டு செல்வதை பார்க்கும் போது எங்கு செல்கிறது இந்த உலகம்? எதை நோக்கி நாம் பயணிக்கிறோம் ?நம்முடைய சிந்தனை எப்படி இருக்கிறது? இது போன்ற பல்லாயிரக்கணக்கான கேள்விகள் எழுகிறது... இதற்கான பதில் அவரவர் பயன்படுத்தும் செல்போனிலேயே உள்ளது..என்று தான்  நாம் எடுத்துக்கொள்ள முடியும் 

இந்த வீடியோவை பொறுத்தவரையில், ஷூட்டிங் எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட சீன் போன்றும் தெரிகிறது. இது ஒரு ஷூட்டிங் எடுக்கப்பட்ட வீடியோவாக இருந்தாலும் கூட... நடப்பதை தானே படம் பிடித்து காண்பிக்கின்றனர் என்ற எண்ணம் எழுகிறது.