சமீபத்தில் நடைபெற்ற "2020 ஆட்டோ எக்ஸ்போ"  நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட  இந்த கார்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற என்ன காரணம் தெரியுமா..?  

Hyundai CRETA 2020..! 7 நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு..! அப்படி என்ன இருக்கு இந்த காரில்.? 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அறிமுகமான வெறும் 7 நாட்களில், ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா காரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்வமாக முன்பதிவு செய்து உள்ளனர். 

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2020 கிரெட்டா எஸ்.யு.வி.மாடலை மார்ச் 2 ஆம் தேதி முதல் முன் பதிவு செய்யலாம் என தெரிவித்து இருந்தது. இந்த காரின் வெளியீடு மார்ச் 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 

சமீபத்தில் நடைபெற்ற "2020 ஆட்டோ எக்ஸ்போ" நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற என்ன காரணம் தெரியுமா..? 

கவனத்தை ஈர்க்கும் புதிய மாடல்

புது புது சிறப்பு அம்சங்கள்

14 வேரியண்ட்கள் மற்றும் 10 நிறங்களில் வெளிவர உள்ளது 

புதிய கிரெட்டா மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்டு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பார்ப்பதற்கு பந்தாவாகவும், கண்ணை கவரும் வகையில் அதிவும் 10 லட்சம் ரூபாயில் கிடைக்கிறது என்றால் சும்மாவா..? 

இன்னும் பல சிறப்பு அம்சங்களையும், அழகான வடிவமைப்பிலும் உள்ளதால் கார் பிரியர்கள் ஆர்வமாக இந்த காரை முன்பதிவு செய்கின்றனர்.